உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சென்னை, மறைமலை நகரைச் சேர்ந்த வேதசெல்வம், 56; ஓட்டினார். நேற்று அதிகாலை சாரம் லாரி பார்க்கிங் பகுதியில் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் வேதசெல்வம் மற்றும் பயணிகள் உட்பட 7 காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ், கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.ஒலக்கூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி