உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஷேர் ஆட்டோக்களை முறைபடுத்த மக்கள் உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

ஷேர் ஆட்டோக்களை முறைபடுத்த மக்கள் உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களை முறைபடுத்த வேண்டும் என்று மக்கள் உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, மக்கள் உரிமைகள் கழகத்தினர், முதன்மை செயலாளர் கந்தன் தலைமையில், விழுப்புரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ள மனு விபரம்:விழுப்புரம் நகரத்தில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தினசரி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 50 ஷேர் ஆட்டோக்கள், 40 நான்கு சக்கர ஷேர் ஆட்டோக்கள் என ஒரே பகுதி நோக்கி விழுப்புரத்தில் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.புதிய பஸ் நிலையம் முதல் ரயில் நிலையம் வரை சில ஆட்டோக்களும், பாண்டிரோடு கம்பன் நகர் வரை சில ஆட்டோக்களும் என ஒரே சாலையில் பயணிப்பதால் நெரிசல் ஏற்படுகிறது.இந்த ஷேர் ஆட்டோக்களை, நான்கு பகுதியாக பிரித்து, சிக்னல் முதல் கோலியனுார் வரை கிழக்கு பகுதியாகவும், சிக்னல் முதல் கண்டமானடி வரையும் தெற்கு பகுதியாகவும், சிக்னல் முதல் சென்னை நெடுஞ்சாலை இ.எஸ்., கல்லுாரி வரையிலும், மேற்கு பகுதியாக சிக்னல் முதல் மாம்பழப்பட்டு ரோடு வெங்கடேசபுரம் வரை என நான்கு தடமாக பிரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் சாதாரண ஆட்டோக்கள் நகரில் அதிகரித்துள்ளது. அவர்களும், ஷேர் ஆட்டோக்கள் போல இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகளவு ஆட்டோக்கள் உள்ளதால், இனி புதிய பர்மிட் அனுமதி வழங்கக் கூடாது. இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ