உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இ.எஸ்.எஸ்.கே., கல்விக் குழும தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்வி வளர்ச்சி புல முதன்மையர் முத்துராஜா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சக்திவேல் சிறப்புரையாற்றினார்.இக்கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், கணினியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். 8 முன்னணி தனியார் தொழில் நிறுவனங்களான அசோக் லைலாண்ட் சென்னை, முஜிடப் பிரைவேட் லிமிடெட் சென்னை, டி.எஸ்.எம்.டி. டெக்னாலஜி செங்கல்பட்டு, பக்ஸ்க்கான் இந்தியா லிட் ஸ்ரீபெரும்புதூர், பேகற்றான் இந்தியா லிட் செங்கல்பட்டு, லுாகாஸ் டி.வி.எஸ்., புதுச்சேரி, டாடா எலக்ட்ரானிக்ஸ் சென்னை, விஸ்டரோன் இன்போகாம் பெங்களூரூ, ஆகிய நிறுவனங்கள் முகாமில் நேர்காணல் நடத்தி, 72 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி