மேலும் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ'
21-Aug-2024
விழுப்புரம் : சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த சாலைஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகன் பெருமாள், 21; இவர், செங்கல் சூளை வைத்துள்ளார். இவரது செங்கல்சூளையில் வேலை செய்து வந்த வெளியூரைச் சேர்ந்த 40 வயது பெண்ணுடன், அவரது 17 வயது மகள் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, பெருமாளுடன், அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி, கோலியனுார் கோவிலில் சிறுமியை பெருமாள் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சிறுமி நேற்று சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.அங்கு பரிசோதனையில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனையிலிருந்து அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவின் கீழ், பெருமாள் மீது நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். போக்சோவில் கைது
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பாலசக்தி, 22; இவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 8 மாத கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து பாலசக்தியை கைது செய்தனர்.
21-Aug-2024