உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரேன் ஆப்ரேட்டர் சாவு போலீசார் விசாரணை

கிரேன் ஆப்ரேட்டர் சாவு போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மண்டகமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் கவிராஜ், 38; கிரேன் ஆப்ரேட்டர். இவர் நேற்று முன்தினம் மாலை மனக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மர்மான முறையில் இறந்து கிடந்தார்.சம்பவ இடத்திற்குச் சென்ற இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார், கவிராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து கவிராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை