உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனியார் பள்ளிகள் சங்க மண்டல நிர்வாகிகள் கூட்டம்

தனியார் பள்ளிகள் சங்க மண்டல நிர்வாகிகள் கூட்டம்

விழுப்புரம்,: விழுப்புரத்தில் தனியார் பள்ளிகள் சங்க மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த மண்டல அளவிலான மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சோழன், ஜான்டூயி பள்ளி நிர்வாகி ராபின் முன்னிலை வகித்தனர். சீனு வரவேற்றார். நிறுவனத் தலைவர் அரசகுமார் சிறப்புரையாற்றினார்.மாநில தலைவர் மூர்த்தி, பொருளாளர் ராஜாராம் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாநில இணைப் பொதுச்செயலாளர் சுப்ரமணி, நிர்வாகிகள் முருகன், மவுண்ட் கார்மல், ஜான் பீட்டர், சின்னதுரை, சுப்ரமணியன், சீனிவாசன், ஆனந்த், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு டி.டி.சி.பி., அப்ரூவல் பெறுவதில் நகரம், கிராமங்கள் என பாராமல் அரசு விலக்கு அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாட பிரிவுகளை துவங்க அனுமதியளிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனுமதித்தல், பள்ளிகளுக்கு நிர்வாக காரணங்களை காட்டாமல் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை