மேலும் செய்திகள்
பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்
20-Aug-2024
ம.தி.மு.க., 31ம் ஆண்டு கொடியேற்று விழா
02-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் மற்றும் திருப்பச்சாவடி மேடு துவக்கப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, தே.மு.தி.க., மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் மனோ தலைமை தாங்கினார்.பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேருக்கு, நோட்டு, பேனா, பென்சில், அட்டை ஆகியவற்றை வழக்கறிஞர் மனோ வழங்கினார். ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சிவா, தொண்டர் அணி செயலாளர் தேவா, ஊராட்சி செயலாளர் அருள் ஜோதி அவைத்தலைவர் அய்யனார் கேப்டன் மன்ற செயலாளர் குமார் கிளைக் கழக துணை செயலாளர் ஆதி துணைச் செயலாளர் உமாநாத், தொண்டர் அணி செயலாளர் சுரேந்தர், செயற்குழு உறுப்பினர் மனோகர், கிளை செயலாளர்கள் அய்யப்பன், அருள், முன்னாள் நகர துணை செயலாளர் ரகு உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Aug-2024
02-Aug-2024