உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்

மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்

கண்டாச்சிபுரம் : தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இறந்த சங்க உறுப்பினரின் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முகையூரில் உள்ள தனியார் மெடிக்கல்ஸ் உரிமையாளர் சிங்காரம் என்பவர் இறந்தார். இவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் குடும்ப நலநிதியாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது மகள் சசிகலாவிடம் மாவட்ட தலைவர் சின்னைய்யா, செயலாளர் குறிஞ்சி வளவன் ஆகியோர் வழங்கினர்.சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வேலு, தாலுகா சங்க செயலாளர் விஜயானந்த், அமைப்பு செயலாளர் ஹாஜாமைதீன், மக்கள் தொடர்பு அலுவலர் அகிலன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ