மேலும் செய்திகள்
கண் சிகிச்சை முகாம் 58 பேருக்கு பரிசோதனை
13-Aug-2024
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மாணவிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்கம், தவளகுப்பம் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் அவலுார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.சங்கத் தலைவர் மாதவன், செயலாளர் யாரப்பேக், பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.கண்ணாடி அவசியம் என தேர்வு செய்யப்பட்ட 37 மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அர்ஷத் கண் கண்ணாடிகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
13-Aug-2024