உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே தொழிற்சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிற்சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை தரம் குறைக்கும் நிர்வாகத்தை கண்டித்து, ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரயில்வே மருத்துவமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். ஈஸ்வர்தாஸ் துவக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யூ., தலைவர் மூர்த்தி, ரயில்வே தொழிற் சங்க நிர்வாகிகள் வேந்தன், செந்தில், பலராம், ராஜா, பேபிஷகிலா, ஜோனஸ் கண்டன உரையாற்றினர். இதில், ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்களின் மருத்துவ சேவையை சீர்குலைக்கும் வகையில், விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை, சுகாதார மையமாக தரம் குறைத்து, படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் ரயில்வே சுகாதாரத்துறை நிர்வாகத்தை கண்டிப்பது. மருத்துவமனையை தரம் உயர்த்த கோரியும் பேசினர்.மோசஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை