மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா; மாணவர்கள் உற்சாகம்
04-Mar-2025
விழுப்புரம்; கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தனித்திறன் போட்டிகளில் அசத்தினர். இப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், 10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 30 மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். இந்த மாணவர்களை பாராட்டி, வேளாண்மை துறை இணை இயக்குநர் சுமதி பரிசளித்தார். பள்ளியின் நிர்வாகி ராஜேந்திரன், விளையாட்டு பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
04-Mar-2025