மேலும் செய்திகள்
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
01-Mar-2025
விழுப்புரம், ;திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் தேசிய அறிவியல் நாளையொட்டி, அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் பப்ளாசா தலைமை தாங்கினார். செயலாளர் ஜின்ராஜ், கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், அறிவியல் சார்ந்த படைப்புகளும், சுற்றுச்சூழல் சார்ந்த வரைபடங்கள், வரலாற்று பதிவுகள் குறித்த பதிவேடுகள், தமிழறிஞர்கள் குறித்த விளக்கங்கள் மற்றும் அனைத்து பாடங்கள் தொடர்பான படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குனர் அனுராக், முதல்வர் சாந்தி பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Mar-2025