மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
27-Feb-2025
மயிலம் : மயிலம் அருகே டாரஸ் லாரி மோதிய விபத்தில் சூப் கடை உரிமையாளர் இறந்தார்.மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு காதர் மகன் வசீர் அகமத், 34; கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சூப், பக்கோடா வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்று மதியம் 12:40 மணியளவில் பைக்கில் சென்றார். மயிலம் சாலையில் இருந்து திண்டிவனம் சர்வீஸ் சாலையில் திரும்பினார். அப்போது, ரெட்டணையில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வசீர் அகமத் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Feb-2025