மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
26-Feb-2025
விழுப்புரம், ;விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், ஜெயபால், தங்கம், ஜெயரவிதுரை, விஸ்வநாதன், ரவிச்சந்திரன், பிரபு, வேம்பிரவி, சேர்மன் முருகன், நகர செயலாளர்கள் கோபிகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, நைனா முகமது, பேரூராட்சி சேர்மன்கள் அன்பு, அப்துல்சலாம், துணை தலைவர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நாளை 28ம் தேதி) சென்னையில் நடக்கும் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, ஹிந்தி திணிப்பு, மும்மொழி கொள்கையை எதிர்த்து போராடுவது, மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு கண்டனம் தெரிவிப்பது, முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு துணை நிற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
26-Feb-2025