உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறப்பு தியான முகாம்

சிறப்பு தியான முகாம்

விழுப்புரம் : வளவனுாரில் பிரம்ம குமாரிகள் தியான நிலையம் சார்பில் தியான பயற்சி முகாம் நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன், வளவனுார் நகர செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். பிரம்ம குமாரிகள் தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் மற்றும் குழுவினர் பயிற்சியளித்தனர்.முகாமில், வாழும் கலை, மன அழுத்தத்திலிருந்து விடுதலை, தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுதலை, ஆத்மா, பரமாத்மா பற்றிய ரகசியங்கள், ஞான விளக்கம் குறித்து, பட விளக்கங்களுடன் பயிற்சியளித்தனர். தொடர்ந்து, ராஜயோக தியான பயிற்சியும் அளித்தனர். முகாமில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ