உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு தின விழா

விளையாட்டு தின விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளி யில் பத்தாம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் பப்ளாசா தலைமை தாங்கினார். செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன் குமார், நிர்வாக இயக்குனர் அனுராக் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சாந்தி பாலச்சந்தர் வரவேற்றார். கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் மாணவர் படை அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், பிரமிடு, யோகா மற்றும் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ