உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதியம் 6,000 வழங்கும் திட்டத்திற்கு, விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது.இதற்கு சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழக இடையேயான போட்டிகள்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சமமேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் வரும் 30ம் தேதி மாலை 6:000 வரை. இதர விபரங்களை, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை