மேலும் செய்திகள்
அப்துல் கலாம் கோப்பைக்கான வாலிபால் போட்டி அபாரம்
13-Aug-2024
திண்டிவனம் : திண்டிவனத்தில் மாநில அளவில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் திண்டிவனம் அணி முதல் இடத்தைப் பிடித்தது.வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 31 மற்றும் 1ம் தேதி மாவட்ட தி.முக., விளையாட்டு அணி சார்பில் கால்பந்து போட்டி நடந்தது. இறுதிப் போட்டியில், திண்டிவனம் கே.சி.பிரதர்ஸ் அணி முதல் இடத்தையும் சென்னை ராயபுரம் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இதே போல் புதுச்சேரி பிளே மேக்கர்ஸ் அணி மூன்றாவது இடத்தையும், சென்னை பல்லாவரம் அப்துல் கலாம் புட்பால் கிளப் அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.வெற்றி பெற்ற அணிக்கு 30 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகளை அமைச்சர் மஸ்தான் வழங்கி பாராட்டினார்.விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Aug-2024