மேலும் செய்திகள்
-மாநில ஊசு போட்டி
19-Feb-2025
விழுப்புரம்; சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்தனர்.சென்னையில் கடந்த 9ம் தேதி நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாவட்ட கராத்தே பயிற்சியாளர் சென்சாய் ரகுராமன் தலைமையில், எய்ம்ஸ் கராத்தே யோகா பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாநில போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று, வரும் ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், குமித்தே பிரிவு, 45 கிலோ எடை பிரிவில் மாணவர் மணிகண்டன் தங்க பதக்கமும், மாணவர் கபிலன் 30 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், கார்த்திகேயன் 35 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சப் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் கனிஷ்காஸ்ரீ 25 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கதாதரன் 25 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.சீனியர் ஆண்களுக்கான பிரிவில் ஷாம் 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவர் சிவம் 45 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், ரஞ்சித் குமார் 65 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மாணவர் ஹரி 55 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், பூங்கோதை சீனியர் 65 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மாநில கராத்தேவில் பதக்கம் வென்று, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களை, டி.எஸ்.பி., முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
19-Feb-2025