உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜேஸ்வரி கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

ராஜேஸ்வரி கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

மரக்காணம்:கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையாப்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி, ஆசிரியர்களின் பெருமை குறித்தும் அவர்களின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். முதல்வர் கண்ணன் மற்றும் துணை முதல்வர் டாக்டர் பூமாதேவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கல்லுாரி நிர்வாகம் சார்பில் அனைத்து பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராஜஷாலினி, ஜெயப்பிரபா செய்தனர். கல்லுாரி மாணவிகள் அனைத்து பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி