த.வெ.க., முதல் மாநில மாநாடு பணி துவங்குவதில் நிர்வாகிகள் மும்முரம்
விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் த.வெ.க., மாநில மாநாடு நடத்துவதற்கான பணிகளை நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.த.வெ.க., கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், முதல் மாநாடு நடத்துவதற்காக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள 85 ஏக்கர் பரப்பிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மாநாடு நடத்த, போலீசார் தரப்பில் 33 நிபந்தனைகளை விதித்து, பொது செயலாளர் புஸ்சி ஆனந்திடம் வழங்கியுள்ளனர். இதையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய், மாநாடு நடைபெறும் இடம், இதற்கான தேதியை அறிவிக்காமல் உள்ளார். இது தொடர்பாக போலீசார் தரப்பில், மாநாடு நடத்துவதற்காக காவல் துறையில் தரப்பில் 33 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.இதற்கு, அவர்கள் ஒப்பு கொண்டு எங்களிடம் தெரிவித்தவுடன் தான், இதற்கான அனுமதி வழங்குவோம் என தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், த.வெ.க., மாநில மாநாடு நடத்துவதற்காக சில தினங்களில் வி.சாலையில் தேர்வு செய்த இடத்தை ஜே.சி.பி., மூலம் சுத்தம் செய்து, பந்தக்கால் நடுவதற்கான நிகழ்ச்சி நடத்த இருக்கின்றோம்இதில் நிச்சியமாக த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்பார் என முக்கிய நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளை விட, தற்போது த.வெ.க., தரப்பிலான அரசியல் சூடுபிடித்துள்ளது.