உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கட்சித் தலைமையின் உத்தரவு எதிரொலி பம்பரமாய் சுழன்ற தி.மு.க., வி.ஐ.பி.,க்கள்

கட்சித் தலைமையின் உத்தரவு எதிரொலி பம்பரமாய் சுழன்ற தி.மு.க., வி.ஐ.பி.,க்கள்

விழுப்புரம் தொகுதியில், தலைமை அதிரடி உத்தரவு எதிரொலியாக, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பம்பரமாய் சுழன்று பணியாற்றினர்.விழுப்புரம் (தனி) தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில், இத்தேர்தலில், வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் மீண்டும் களம் இறங்கினார். தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., தரப்பில் தீவிர தேர்தல் பணி நடப்பதாக, தி.மு.க., மேலிடத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தி.மு.க., சீனியர் அமைச்சருக்கு, முக்கிய உத்தரவு பறந்தது.அதன் எதிரொலியாக, மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில், கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடந்தது. இதில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வி.சி., வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென அமைச்சர் பொன்முடி, திட்டவட்டமாக தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம் சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் தங்கம், நகர மன்ற தலைவர் தேவி முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் ஆகியோர் ஓட்டு சேகரிப்பு பணியை துரிதப்படுத்தினர்.இதற்கிடையே, அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஆகியோர் திண்டிவனம் சட்டசபை தொகுதியிலும் தீவிர பிரசாரம் செய்தனர்.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, உளுந்துார்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏ., மணிகண்ணன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர், தொகுதி முழுதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மேலும், ஓட்டுகள் சிதறாமல் சென்று சேர்க்கும் பணிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஒதுக்கப்பட்டது.இதன் காரணமாக வி.சி., வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கிடைக்கும் என தி.மு.க., நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி