உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

வானுார் : கிளியனுார் அருகே சண்டைக் கோழிகளைத் திருடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு புது காலனியைச் சேர்ந்தவர் கண்ணபிரான், 45; இவர் தனது வீட்டில் சண்டை கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, கண்ணபிரான் வீட்டில் இருந்த சண்டைக் கோழிகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணபிரான் அப்பகுதி மக்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த கிளியனுார் போலீசார் 3 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.அவர்கள், சென்னை, நமச்சிவாயபுரம்ரத்தினம் மகன் ஹரிஷ்குமார், 18; சாகுல்அமீது மகன் கசர், 21; மற்றும் ஆதனப்பட்டு புதுகாலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை