உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு

விழுப்புரம் : வளவனுார் அருகே கிணற்றில் விழுந்த தொழிலாளி இறந்தார்.வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி ராணி, 48; இவர், நேற்று முன்தினம் இரவு 8:45 மணிக்கு வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது, அங்கிருந்த வி.அகரத்தை சேர்ந்த தொழிலாளி சத்தியராஜ், 34; ராணியை காப்பாற்ற 30 அடி ஆழம் தண்ணீரில்லாத கிணற்றில் குதித்தார்.உடன் அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சத்தியராஜை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், சத்தியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ராணி லேசான காயங்களோடு உயிர் தப்பினார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்