உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை மணக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் மண்டகமேடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 24; என்பதும் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ