| ADDED : ஏப் 23, 2024 06:45 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபிேஷகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, புதிய சுவாமி சிலைகளுக்கு கரிகோலம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 9:15 மணியளவில் கடம் புறப்பாடும், தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில், நகரமன்றத் தலைவர் நிர்மலா சீத்தாராமன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, பாத்திரக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.