உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு

அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் சர்வீஸ் சாலையில் அரசு விரைவு பஸ் திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் சாலையருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக காலை 9.30 மணிக்கு புதிய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் வந்தபோது முன்புற வலது பக்க டயரில் திடீரென ஆக்ஸில் கட்டாகியது.சுதாரித்த டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை அங்கேயே நிறுத்தியதால் அதில் பயணித்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்திருந்த அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சர்வீஸ் சாலை வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெக்கவரி வாகனம் வரவழைக்கப்பட்டு பழுதான பஸ்சை நகர்த்திய பின், காலை 10.15 மணிக்கு போக்குவரத்து சீராகியது. இதன் காரணமாக விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே சர்வீஸ் சாலையில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ