த.வெ.க., நிர்வாகிகள் கொண்டாட்டம்
விழுப்புரம்: இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அதிகாரபூர்வமாக அறிவித்ததையொட்டி, விழுப்புரத்தில் இளைஞரணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே, இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், இளைஞரணி நிர்வாகிகள் தீனா, பிரதீப்ராஜ், ராஜாராம், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் காணை மணி, சுப்புராஜ், ராஜதுரை, விஜயகுமார்.கோலியனுார் சுரேஷ், சபரி, ஆனந்த், ஏழுமலை, தினேஷ், விக்கிரவாண்டி வேலு, சிவமூர்த்தி, வேட்டைக்கார மணி, விக்கிரவாண்டி நகரம் மணி, கண்டமங்கலம் அரவிந்தன், நகர நிர்வாகிகள் பாலவிக்னேஷ், சிவா, குமார், ராஜேஷ் கண்ணன், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.