உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., கொடி கம்பம் நட்ட பிரச்னை விக்கிரவாண்டி அருகே பதற்றம்

வி.சி., கொடி கம்பம் நட்ட பிரச்னை விக்கிரவாண்டி அருகே பதற்றம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வி.சி., கட்சி கொடி கம்பம் நடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் கோவில் இடத்தில் இருந்த வி.சி., கட்சி கொடிக் கம்பத்தை கடந்த 17ம் தேதி தாசில்தார் யுவராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் அக்ற்றப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு மீண்டும் அதே இடத்தில் மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் புதிய கொடி கம்பம் நட வி.சி., கட்சியினர் கூடினர். தகவலறிந்த கிராம மக்கள் கோவில் முன் திரண்டதால், பதற்றம் நிலவியது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு கலையரசன் ஆகியோர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.சி., கட்சியினர் போலீசாரை தள்ளி விட்டு கொடி கம்பத்தை நட்டதால் பதற்றம் நிலவியது.சம்பவ இடுத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி., திருமால், தாசில்தார் யுவராஜ், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த 15 அடி துாரம் தள்ளி கொடி கம்பத்தை நடுமாறு கிராம மக்கள் கூறினர்.இந்நிலையில் ஊர் தரப்பை சேர்ந்த பழனி,43; என்பவர் தன் மீது டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.தொடர்ந்து மாலை 6:00 மணிவரை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் கிராம மக்கள் அனைவரும் ஒரு மனதாக தங்கள் கிராமத்தில் எந்த கட்சி கொடி கம்பங்களும் இருக்கக் கூடாது என முடிவு செய்து தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சி கொடி கம்பங்களை அகற்றினர்.அதன்பிறகு அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி வி.சி., கட்சியினரும் தங்கள் கொடி கம்பத்தை அகற்றினர் .இப்பிரச்னை காரணமாக கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !