உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; துணை ராணுவம் சோதனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; துணை ராணுவம் சோதனை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி யில் இடைத் தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தொகுதிக்கு தேர்தல் பணிக் காக மது பாட்டில், பணம், பரிசு பொருட்கள் வருவதை தடுக்க நேற்று முதல் துணை ராணுவ படையினர் தீவிர வாகன தணிக்கையை துவங்கியுள்ளனர.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனை சாவடியில் சப் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஏட்டு குமார், துணை ராணுவ படைஏட்டு சுரேஷ்குமார், முரளி, சிவா ஆனந்த், பீமா சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி