மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
1 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
1 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக கூடுதலாக தேவைப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடந்தது.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 276 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொகுதிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் 331 ஓட்டுப்பதிவு கருவிகளும், 331 கட்டுப்பாட்டு கருவிகள், 357 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 1,019 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் பயன்பாட்டிற்காக கூடுதலாக தேவைப்படும் 150 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்தார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழரசன், தனி தாசில்தார் கணேசன் உடனிருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago