இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு 1,003 பேர் ஆப்சென்ட்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சீருடை பணியாளர் தேர் வில் 1003 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு நேற்று நடந்தது. 3,644 மற்றும் 21 பழங்குடியினருக்கான காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்விற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த, 8,361 ஆண்கள், 2,498 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 859 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 8 தேர்வு மையங்களில் தேர்வு நடந்து. தேர்வெழுத, தேர்வர்கள் மையத்திற்கு காலை 9:00 மணிக்கு வந்த தேர்வர்களை, பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசார், தீவிரமாக சோதனை செய்து, மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். தேர்வை 7,548 ஆண்கள், 2,308 பெண்கள் என 9,856 எழுதினர். இதில், 812 ஆண்கள், 191 பெண்கள் என 1,003 பேர் ஆப்சென்ட். தேர்வு மையங்களை டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெண் தேர்வருக்கு உதவியபோலீஸ்காரருக்கு பாராட்டு
விழுப்புரம், வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி தேர்வு மையத்திற்கு வந்த பெண் தேர்வர் ஒருவர், தனது ஆதார் அட்டை எடுத்து வரவில்லை. வீட்டிற்கு சென்று எடுத்து வர போதிய நேரமில்லாத சூழலை புரிந்து கொண்ட அங்கிருந்த பாதுகாப்பு பணி போக்குவரத்து தலைமை காவலர் கருணாகரன், தனது பைக்கில் அந்த பெண் தேர்வரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நெட் சென்டருக்கு அழைத்து சென்று, அதன் உரிமையாளரை கடையை திறக்க வைத்து, ஆதார் அட்டையை பிரிண்ட் எடுத்து கொண்டு, தேர்வு மையத்திற்கு நேரத்திற்கு கொண்டு வந்து விட்டதை சக போலீஸ்காரர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.