உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

செஞ்சி: செஞ்சிக்கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 35ம் ஆண்டு ஆடி பவுர்ணமி பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, 11:30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை, உடுக்கை, மேளத்துடன் பூங்கரகம் மற்றும் 108 பால் குடம் ஊர்வலம் புறப்பட்டது. பகல் 12:00 மணிக்கு செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம், சிறப்பு அலங்கரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 9:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் முத்து பல்லக்கில், சக்தி கரகத்துடன் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை