மேலும் செய்திகள்
மாவட்ட வழங்கல் அலுவலர் மாற்றம்
08-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் 12 பேர், கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனம் சிப்காட் தனி தாசில்தார் வேலு, மேல்மலையனுார் தாசில்தாராகவும், திண்டிவனம் சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் பாலமுருகன், விழுப்புரம் கலால் மேற்பார்வை அலுவலராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, தாசில்தார்கள் மகாதேவன், ரகுராமன், கண்ணன், கோவர்த்தனன், தனலட்சுமி, செந்தில்குமார், கனிமொழி, ரமேஷ், சங்கரலிங்கம், கார்த்திகேயன் உள்ளிட்டோரை, மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றி கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
08-Oct-2025