மேலும் செய்திகள்
கடைகளுக்கு எச்சரிக்கை
27-Nov-2024
விழுப்புரம் : முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் விசாகபட்டினத்தில் இருந்து வந்த 1,276 மெ.டன் யூரியா உர மூட்டைகள் வந்திறங்கின.இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர், கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் செய்துள்ளனர்.தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 7,578 மெ.டன்., டி.ஏ.பி., 1,658 மெ.டன், பொட்டாஷ் 1,693 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5,742 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1,600 மெ.டன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகிறது.மாவட்டத்திற்கு தேவையான உர விநியோக திட்ட இலக்கீடுபடி, உர நிறுவனங்களிடம் இருந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, உரங்கள் பெறப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.அதன்படி, என்.எப்.எல்., நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வந்துள்ளது. மொத்தம், 1,276 மெ.டன் யூரியா உர மூட்டைகள் வந்தடைந்துள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு 460 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 460 மெ.டன், கடலுார் மாவட்டத்திற்கு 302 மெ.டன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 126 மெ.டன் உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது.இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் கூறினார்.
27-Nov-2024