மேலும் செய்திகள்
வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு
03-Oct-2025
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு, ராமகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்த 1313 மெ.டன்., யூரியா உர மூட்டைகளை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உளுந்து, மணிலா, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 2784 மெ.டன், டி.ஏ.பி., 1917 மெ.டன், பொட்டாஷ் 1282 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5821 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1614 மெ.டன், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஆர்.எப்.சி.எல்., நிறுவனம் மூலம், ராமகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து, 1313 மெ.டன் யூரியா உர மூட்டைகள், சரக்கு ரயிலில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தன. இந்த உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மூட்டைகளை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
03-Oct-2025