கஞ்சா விற்ற 2 பேர் கைது
அவலுார்பேட்டை : கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேல்மலையனுார் அடுத்த தாதங்குப்பம் ஏரிக்கரை அருகே நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 44, தாதங்குப்பம் ரகு என்கிற ராஜ்குமார், 25; ஆகிய இருவரையும் கைது செய்து, 20 கிராம் கஞ்சா, 1000 ரூபாய் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.