பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
வானுார்: பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் அனிச்சங்குப்பம், சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 27 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி, கரிசல்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் செல்வகணேஷ், 24; முருகன் மகன் அர்ஜூனன், 24; என்பதும் தெரிந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.