உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

விக்கிரவாண்டி; புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வீடூர் அணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பைக்கில் பாத்திர வியாபாரம் மற்றும் தலைமுடி வாங்குவது போல வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு 100 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில் செஞ்சியைச் சேர்ந்த ரஜினி, 35; வெங்கடேசன், 35; என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை