புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
வானுார்; லாரியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் நேற்று புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், கொ ந்தமூர் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற, லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்த இருவர், 49 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மன்னன் கோவில் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் செல்வம், 26; லாரி ஓட்டுநரான ஆலஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் பிரவீன், 27; என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 49 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.