உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே, லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேல்மலையனுார் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எய்யில் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் சென்ற லாரியை மடக்கி விசாரித்தனர். அந்த லாரியில் அனுமதியின்றி, 4 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து , திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டை சேர்ந்த உரிமையாளர் சோமு,58; டிரைவர் ஏழுமலை,50; ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ