உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் தகராறு 2 பேர் கைது

போதையில் தகராறு 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அடுத்த மதியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 85; இவர், நேற்று முன்தினம் இறந்தார். உடலை அடக்கம் செய்ய அதே பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது பச்சைவெளிகுப்பத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பிரிவை சேர்ந்த மணிகண்டன் தட்டிக்கேட்டதால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பு புகாரின் பேரில் பச்சைவெளி குப்பத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி, துரை, மதியனுார் மணிகண்டன், கதிர்வேல், குடியரசு மணி, தனுஷ் ஆகிய 6 பேர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சக்கரவர்த்தி, 36; குடியரசு மணி, 45; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி