கழிவுநீர் வெளியேற்றும் தகராறில் 2 பேர் கைது
வானுார்; கழிவுநீர் வெளியேற்றும் தகராறில் சகோதரர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் அடுத்த தென்கோடிப்பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தீர்த்தமலை மகன்கள் முத்துராமன், 28; முத்துலிங்கம், 24; எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள் கன்னியப்பன் மகன்கள் சவுந்தர்ராஜன், 31; பாண்டியன், 30; இவர்களுக்கிடையே கழிவுநீரை வீட்டின் எதிரில் விடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் முத்துராமன் வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேறியுள்ளது. இதனை பாண்டியன் மனைவி சினேகா, தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், முத்துராமன், முத்துலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து, சவுந்தர்ராஜன், பாண்டியனை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சவுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமன், முத்துலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.