உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 2 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் பகுதியில் பல இடங்களில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக எஸ்.பி.,க்கு புகார்கள் வந்தது. அதன் பேரில், திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் சின்னமுதலி தெரு பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் 50 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பம் வேல்முருகன், 34; திண்டிவனம் அடுத்த டி.கேணிப்பட்டு முனுசாமி மகன் ஜீவானந்தம், 24; என தெரியவந்தது. உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை