உள்ளூர் செய்திகள்

2 பைக் திருட்டு

விழுப்புரம்; விழுப்புரத்தில் மாயமான 2 பைக்குகள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகே ப.வில்லியனுாரை சேர்ந்தவர் பழனிவேல், 49; இவர், கடந்த வாரம் வழுதரெட்டியில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் சர்வீஸ் செய்வதற்காக பைக்கை நிறுத்தி, மொபைல் மூலம் மெக்கானிக்கிற்கு தகவல் கூறினார். சிறிது நேரத்தில் கடை முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது.பீகார் மாநிலம், ராம்பகாத் புர்னே பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ஜாதா,34; திருவெண்ணைநல்லுார் ரயில்நிலைய நிலைய அதிகாரி. விழுப்புரம் கேசவநாயக்கர் வீதியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த 6ம் தேதி இரவு பணி முடித்து திரும்பிய சதிஷ்குமார் ஜாதா, தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை அவரது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகார்களின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை