உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவிகள் 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவிகள் 2 பேர் மாயம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாயமான கல்லுாரி மாணவிகள்இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.வி.மருதுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் அபிநயா,19; இவர், அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27 ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அபிநயாவின் தாய் ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ