ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்
அவலுார்பேட்டை : வளத்தியில் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து 2 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 62; விவசாயி. இவர், வளத்தியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் கடந்த 10 ம்தேதி மதியம் பணம் எடுக்கச் சென்றார். அங்கு கார்டை மெஷினில் விட்டதில் பணம் வரவில்லை.அப்போது அங்கிருந்த 2 பேர் பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி கார்டை வாங்கி முயற்சி செய்து விட்டு, பணம் வரவில்லை என அவரது கார்டை தராமல் வேறு கார்டை துரைசாமியிடம் கொடுத்துள்ளனர்.உடனே துரைசாமி வங்கி கிளையில் சென்று விசாரித்தபோது, அவருடைய கணக்கிலிருந்த 2 லட்சத்து 8 ஆயிரத்து 623 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.ஏ.டி.எம்., மையத்தில் தன்னிடம் இருந்த கார்டை வாங்கி மாற்றிக் கொடுத்து அவர்கள் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.