மேலும் செய்திகள்
நகை, பணம் திருட்டு 2 பேர் கைது
18-Sep-2025
காத்திருப்பு போராட்டம்
26-Sep-2025
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 70; சொத்து பிரச்னையில், அவரது இரண்டாவது மனைவியின் மகன் சந்திரசேகர், 51; என்பவர், நேற்று முன்தினம் டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணைக்குப் பின் நேற்று மதியம் சந்திரசேகரின் மனைவி அன்பரசி, 32; மற்றும் மைத்துனர் நெடுஞ்செழியன், 25; ஆகியோருக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அன்பரசி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
18-Sep-2025
26-Sep-2025