உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  

குட்கா வைத்திருந்த 2 பேர் கைது  

வானுார்: கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் கதிவரன் மற்றும் போலீசார் கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரே பைக்கில் இருவர் வந்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் கிளியனுார் காடாகுளத்தை சேர்ந்த பாண்டியன், 28; திண்டிவனம், கருவம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், 33; எனவும், புதுச்சேரியில் இருந்து குட்கா வாங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ