மேலும் செய்திகள்
அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது
01-Nov-2025
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேர் கைது
12-Oct-2025
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, குமாரக்குப்பத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் நவீன்குமார், 19; என்பவர் தனது பைக்கில், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவர் கைது விழுப்புரம், பெரியார் நகர் அருகே தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விலை உயர்ந்த பைக்கை ஓட்டி வந்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ்குமார், 26; மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
01-Nov-2025
12-Oct-2025